நிழற்படம் இல்லை

ஆனந்தன்:

பெயர்: க.சச்சிதானந்தன்
புனைபெயர்:ஆனந்தன்
பிறந்த இடம்: மாவிட்டபுரம்(19.10.1921)

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நவீனம், காவியம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • ஆனந்தத்தேன் - 1954

காவியம்:

  • யாழ்ப்பாணக் காவியம் - 1959

ஆய்வுநூல்:

  • தமிழர் யாழியல் - 1967

பிறநூல்கள்:

  • தியாக மாலை வரலாறு (ஈழத்தமிழர்களின் பெருந்தலைவர்களில் ஒருவரான மாவை கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கோப்பாய்க்கோமகன் கு.வன்னியசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு - 1959
  • மஞ்சு காசினியம்: இயங்கு தமிழயல் - 2001
  • இலங்கைக் காவியம்: பருவப் பாலியர் படும்பாடு – 2002
  • மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) – 2003
  • எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை - 2004
  • மாவை முருகன் - 1952

விருதுகள்:

  • சாகித்திய ரத்ன – 1999
  • சம்பந்தன் விருது – 2001
  • வட – கீழ் மாகாண ஆளுநர் விருது – 2003
  • தந்தை செல்வா நினைவு விருது – 2004
  • இலங்கை இலக்கியப் பேரவை விருது – 2004
  • கலாகீர்த்தி தேசிய விருது – 2005

இவர் பற்றி:

  • பண்டிதர் க.சச்சிதானந்தன் நாடறிந்த கவிஞர். ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். பட்டதாரி, பண்டிதர், முதுகலைமாணி.1938 – 1944 கால கட்டத்தில் நல்ல சில சிறுகதைகளைப் படைத்துள்ளார். அன்னபூரணி இவர் ஈழகேசரியில் எழுதிய நாவல் ஆகும். இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். 80 வயதில் அமரரானார். இவர் உடுவில் மகளிர் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, பரமேஸ்வராக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கணிதம், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அத்தோடு பலாலி ஆசிரியர் கலாசாலையில் உளவியற் பேராசிரியராகவும் பணியாற்றினார். சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் உருவாக்கிய காலத்தில் அவருடன் இருந்து ஆய்வுகளுக்கும் எழுத்துப் பணிக்கும் உதவிய பெருமைக்குரியவர். கீழைத்தேய, மேலைத்தேய இருவழிக் கல்வியிலும் ஈடுபாடும் புலமையும் மிக்கவர். இவருடைய 'சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்' என்ற பாடல் வரிகள் பிரபல்யமானவை. இவர் 21.03.2008 இல் காலமானார்.



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).